search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ரவுடி மரணம்"

    சென்னை ரவுடி மரணம் அடைந்தது தொடர்பாக ஜெயில் அதிகாரிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

    பொன்னேரி:

    திருவொற்றியூர், பூங்கா புரத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், பிரபல ரவுடி. கடந்த 30-ந் தேதி பொன்னேரி பகுதியில் கொள்ளையில் ஈடுபட பதுங்கி இருந்ததாக போலீசார் அவரை கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

    நேற்று காலை சிறையில் இருந்த அடைக்கலராஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சிறை அதிகாரிகள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடைக்கலராஜ் இறந்தார்.

    அடைக்கலராஜின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி ருக்மணி சந்தேகம் எழுப்பி இருந்தார். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அடைக்கல ராஜின் மரணம் குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி மணி உத்தரவின் பேரில் பொன்னேரி மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். ஜெயில் அதிகாரிகள் மற்றும் அடைக்கலராஜின் உறவினர்கள், டாக்டரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் இன்று அடைக்கலராஜின் உடல் வீடியோ பதிவுடன் பிரேத விசாரணை செய்யப்படுகிறது. இன்று பிற்பகல் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    பொன்னேரி ஜெயிலில் சென்னை ரவுடி திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    திருவொற்றியூர், பூங்காபுரத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (வயது 45). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

    கடந்த 30-ந் தேதி பொன்னேரி பகுதியில் கொள்ளையில் ஈடுபட பதுங்கி இருந்த அடைக்கல ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை ஜெயில் சிறையில் இருந்த அடைக்கலராஜுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை சிறை அதிகாரிகள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அடைக்கலராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அடைக்கலராஜின் ‘திடீர்’ சாவுக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. மாரடைப்பால் அவர் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே பொன்னேரி ஆஸ்பத்திரியில் இருந்த அடைக்கலராஜின் உடலை பார்த்து அவரது மனைவி ருக்மணி கதறி அழுதார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறையில் இருந்த கணவர் அடைக்கலராஜை நேற்று மாலை சந்தித்து உணவு கொடுத்து வந்தேன். இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். எனவே அங்கு வரும்படி கூறி இருந்தார். அவரை பெயிலில் எடுக்க முடிவு செய்திருந்தோம். இதற்குள் இன்று காலை கணவர் இறந்து விட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் தாக்கியதில் அவர் இறந்து உள்ளார். இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    ×